தர்ன் ஃப்லிம் ஃபேக்டரி சார்பாக சஃபீக் தயாரிப்பில் பி.எஸ்.அர்ஜுன் இயக்கியிருக்கும் திரைப்படம் "அமுதா'. திடுக்கிட வைக்கும் பல திருப்பங்கள் கொண்ட மியூக்கல்-திரில்லர் படமான இதில் முதன்மை கதாபாத்திரமாக ஸ்ரேயாஸ்ரீ நடிக்கிறார். இவருடன் அனீஸ் ஷா, லெவின் சைமன் ஜோசப், ஆஷ்னா சுதிர் மற்றும் அசிஸி ஜிப்சன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜேஸ் பனங்கட் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அருண் கோபன் இசையமைத்திருக்கிறார்.

Advertisment

amutha

முழுமையாகப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், வெளியீட்டிற்கான இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.